2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மூன்றாவது அலை வீரியமானது; அதிக அவதானம் தேவை’

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, அப்துல்சலாம் யாசீம்

கொவிட் 19 தொற்றின் மூன்றாவது ஆலையின் தாக்கமானது வேகமானதாகவும், வீரியம் கூடுதலாகவும் காணப்படுவதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ. ஆர்.எம்.தௌபீக் அறிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுத் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ்களில் பயணிக்கும் பிரயாணிகள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சமூக இடைவெளியைப் பேணி, முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் மீறும் பட்சத்தில் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுகின்ற பஸ்களைப் பரிசோதிப்பதற்கு பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் இன்று (29) முதல் கொவிட்-19 இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருவதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் சில சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருவதாகவும், நாளை முதல் கிழக்கு மாகாணத்தின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும்  இத்தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முதலாவதாக சுகாதாரத் துறையினருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .