2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘மொழிகளின் இடைவெளியே துயரங்களுக்கு முக்கிய காரணங்கள்’

எஸ்.கார்த்திகேசு   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாட்டில் கடந்த மூன்று தசாப்பங்களாக இடம்பெற்ற துயரங்களுக்கு நாட்டில் காணப்பட்ட மொழி ரீதியான தடைகள் ஒரு முக்கிய காரணங்களாக அமைந்திருந்தது” என திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்தார்.

தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக, தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஊடாக திருக்கொவிலில் நடத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள மொழி கற்கை நெறி வகுப்புகளின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

“ஒருவரின் உணர்வுகளை, கருத்துகளை புரிந்துகொள்வதற்கு மொழி அவசியமானது. மொழி ரீதியான நல்லிணக்கங்கள், கடந்த காலத்தில் இடம்பெற்று இருக்குமானால், இலங்கையில் பாரிய அழிவுகள் இடம்பெறாது தடுத்திருக்க முடிந்திருக்கும்.

“இலங்கையில் வாழும் மக்கள் குறைந்தபட்சம் தமிழ்,சிங்களம் ஆகிய இரு மொழிகளை கற்றுக்கொண்டு இருந்தாலே போதுமானதாக இருக்கின்றது. ஆனால், இந்தியாவில் 100க்கு மேற்பட்ட மொழிகள் காணப்படுகின்றது. அந்த நாட்டில் வாழும் மக்கள் குறைந்தது 10 மொழிகளாவது தெரிந்திருப்பது அவர்களின் தேவையாக இருக்கின்றது.

“இவ்வாறு மொழிக் கல்வியை கற்றுக் கொள்வதன் ஊடாக, நாட்டின் சமாதானத்துக்கு மாத்திரமன்றி பொருளாதார மற்றும் இலங்கையில் வரலாற்றுக்கு முக்கிய ஒன்றாக அமைவதோடு, எதிர்கால சந்ததியினர் ஒற்றுமையுடன், சுவீட்சமாக வாழ வழிவகுக்கும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X