2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டி இலங்கைக்கு முதலிடம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2020 ஜனவரி 20 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரீன், இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டியில் தங்கம் வென்று, இலங்கைக்கு முதலிடம் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்த சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டி கடந்த 13ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை சர்வதேச விஞ்ஞான, தொழில்நுட்ப, பொறியியல் ஆய்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில், இந்தோனேஷியாவின் ஜாவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதன்போது இறுதிச் சுற்றுக்கு தெரிவான 24 நாடுகளுள் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய பாத்திமா ஷைரீன் முதலிடம் பெற்று, தங்க விருதை வென்றுள்ளார்.

இச்சர்வதேச போட்டியில் இலங்கை தங்கப்பதக்கம் வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இம்மாணவியின் பல்துறை சாதனைகளுக்காக அண்மையில் கல்லூரி சமூகத்தினரால் 'துர்ரதுல் மஹ்மூத்' (விலைமதிப்பற்ற முத்து) எனும் பட்டமும் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

இவர், கல்முனை கடற்கரைபள்ளி வீதியைச் சேர்ந்த இனாமுல்லாஹ் ஷக்காப் மௌலானா - மௌலவி அப்துல் கனி மஜ்மலா தம்பதியரின் புதல்வியாவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .