2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘வியூகங்கள் குறித்து சிந்தித்தாக வேண்டும்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

முஸ்லிம் சமூகத்துக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை வெற்றி கொள்வதற்கான வியூகங்கள் குறித்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சிந்தித்தாக வேண்டியுள்ளதாக, அக்கட்சியின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் குறிப்பிட்டார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "திகாமடுல்ல மாவட்ட மக்கள் எனக்கு மீண்டும் வழங்கிய ஆணையை மதித்து முஸ்லிம் சமூகத்தின் குரலாக நாடாளுமன்றில் என்றும் ஒலிப்பேன் என உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன்.

“திகாமடுல்ல மாவட்ட கட்சிப் போராளிகள் என்மீது நம்பிக்கை வைத்து, இம்முறையும் கூடிய விருப்பு வாக்குகளை வழங்கி, நான்காவது தடவையாகவும் உங்கள் பிரதிநிதியாக என்னைத் தெரிவு செய்தமைக்கு மீண்டுமொருமுறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, என்றும் உங்கள் சேவகனாக இருப்பேன்.

“கொரோனா தொற்று சூழ்நிலையிலும் இத்தேர்தலில் மக்கள், தேர்தல்கள் ஆணைக்குழு, சுகாதார துறையினரின் வழிகாட்டல்களை பின்பற்றி, அதிலுள்ள அசௌகரியங்களையும் பொருட்படுத்தாது, ஆர்வத்துடன் வாக்களித்து முஸ்லிம் சமூகத்தின் குரல் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டியமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

“நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, எதிர்காலத்தில் எம் சமூகத்துக்கு ஏற்படக்கூடிய சவால்களை வெற்றி கொள்வதற்கான வியூகங்களைப் பற்றி கட்சி சிந்தித்தாக வேண்டியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .