2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குமாறு கோரிக்கை

Editorial   / 2019 ஜூன் 25 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அம்பாறை மாவட்டத்தில், வரட்சியால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள விவசாயச் செய்கைகளுக்கு,  நட்டஈடு வழங்க  நடவடிக்கை எடுக்குமாறு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை, நீரின்மையால் முற்றாகக் கைவிடப்பட்டுள்ளது. நெற்செய்கைகளுக்கு உரிய காலத்தில் நீர் கிடைக்காமை, கடும் வறட்சி போன்ற காரணங்களால், ஆயிரக்கணக்கான விவசாயச் செய்கை கைவிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் குளியாப்பிட்டிய, கொக்குப்பீச்சி, கரடிப்பாலை, மொட்டையான்வெளி, பட்டிமேடு மற்றும் சேனைக்காடு போன்ற விவசாயப் பிரதேசங்களில் கூடுதலாக நெற்செய்கைக் கைவிடப்பட்டுள்ளது.

வங்கிகளிலும் ஏனைய நிதி நிறுவனங்களிலும் நிதிகயைப் பெற்று விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். நாளாந்த கூலிக்கு விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சொல்லொன்னா துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு, உடன் நட்டஈடு வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .