2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘வாழும்போது வாழ்த்துவதே சிறப்பான செயற்பாடு’

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விமான்களுக்கு,அரசியல் வாதிகளுக்குமெனப் பல விழாக்களை நடத்துகின்றோம். ஆனால், மனிதத்தை நேசிக்கின்றவர்களை வாழும்போது வாழ்த்துவதே எங்களின் நோக்கமாகுமென அக்கரைப்பற்று மானிட விருத்திக்கான சமூக அமைப்பின் தலைவர் கே.எல்.மர்சூக் தெரிவித்தார்.

 அக்கரைப்பற்று மானிட விருத்திக்கான சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற சமூக சேவையாளர் உமர்கர்த்தாப் முர்சலீனைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் எஸ்.எப்.எச் அமைப்பின் தலைவர் கே.எல்.மர்சூக் தலைமையில் அக்கரைப்பற்று அய்னா பீச் காடனில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் 50 வருட பொதுச் சேவையில் தன்னை அர்ப்பணித்த முர்சலின் காக்கா என்றழைக்கப்படும் உமர்கர்த்தாப் முர்சலீனை, அக்கரைப்பற்று கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், உலமாக்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .