2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நெற்செய்கையில் செலவுகளைக் குறைத்து, விளைச்சலை அதிகரிக்கும் பொருட்டு, புதிய நெற்செய்கை பொதியை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு, அட்டாளைச்சேனையில் இன்று (12) நடைபெற்றது.

அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று வதிவிடத்திட்ட முகாமையாளர் காரியாலயத்தின் அனுசரனையுடன் அம்பாறை அட்டாளைச்சேனை, மீனோடைக்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

விவசாய பயிலுனர் மாணவர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்ட  இச்செயலமர்வின்போது, ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம், ஒருங்கிணைந்த போசணை முகாமைத்துவம், ஒன்றிணைந்த களைக் கட்டுப்பாட்டு முறைகள் தொடர்பாகவும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

அத்துடன், விவசாயிகள் எதிர்நோக்குகின்ற சவால்கள், பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில், அம்பாறை மாட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், மாவட்ட விவசாய நிலையத்தின் பண்னை முகாமையாளர் எம்.வை.எம்.நியாஸ், அட்டாளைச்சேனை விவசாய பயிற்சி நிலையப் பொறுப்பு விவசாய போதனாசிரியர் ஏ.எச்.ஏ. முபாரக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

விவசாயிகளின் நன்மை கருதி அண்மைக்காலமாக மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தினால் இவ்வாறான நலன் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .