2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விவசாய உற்பத்தி மேம்பாட்டு வாரம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறந்த நாடொன்றை கட்டியெழுப்பும் நோக்கில் மக்களுக்கு சுகாதாரமானதும், போசாக்கு நிறைந்ததுமான உணவை வழங்கும் நோக்குடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள, “நஞ்சற்ற உணவு உற்பத்தி திட்டம்” வெற்றியடைந்து வருவதாக அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் தெரிவித்தார்.

விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாயிகளுக்கான, விவசாய உற்பத்தி மேம்பாட்டு வாரத்தினை முன்னிட்டு, நேற்றைய தினம் (23) அம்பாறை உகன பிரதேசத்தில் நடைபெற்ற, அம்பாறை மாவட்டத்திற்கான அங்குராப்பண வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“விவசாயத் துறையை கட்டியெழுப்புதற்கு அரசாங்கத்தினால் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விசேட வேலைத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெரும் பங்காற்றி வரும் விவசாயத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு புதிய தொழில்நுட்ப ரீதியிலான விவசாய செய்கையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெரும் நன்மையடைவதோடு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உதவ முன்வர வேண்டும்.

அம்பாறை மாவட்டம் விவசாயத் துறைக்கு பெரும் பங்காற்றி வருகின்றது. அந்த வகையில் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாய மேம்பாட்டு வாரமானது, விவசாயிகள் நீண்ட நாட்களாக எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கக் கூடியதாகவுள்ளது.

விவசாயிகள் இதனூடாக தங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இப்பிரதேசத்தில் விவசாயத் துறை வளர்ச்சியடையும்.

எதிர்காலத்தில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் பிரதேசங்களில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ள முடியாமல் போனால் அப்பிரதேசங்களில் மாற்றுப் பயிர்களை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

பயிர்ச் செய்கைக்கு பொருத்தமான நிலங்கள் எதுவும் தரிசு நிலங்களாக விடக் கூடாது. இதனை பயனுள்ளதாக மாற்றுவதற்கு விவசாயிகள் அதற்குத் தேவையான ஆலோசனைகளை விவசாயத் திணைக்களம் வழங்கி வருகின்றது.

விவசாய மேம்பாட்டு வாரம் ஏப்ரல் 23 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை ஒவ்வொரு விவசாய கமநல சேவை பிரிவுகள் தோறும் வலய ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .