2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘விவசாயக் காணிகளில் எல்லை கற்கள் இடப்படுவது கண்டிக்கத்தக்கது’

எஸ்.கார்த்திகேசு   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் மக்களின் விவசாயக் காணிகளில், வனபரிபாலனத் திணைக்களத்தினரால் தொடர்ந்தும் எல்லைக் கற்களை இட்டுவரும் செயற்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வில்காமம் பிரதேசத்தில், திருக்கோவில் பிரதேசசபையால் குப்பைகளைச் சேகரிப்பதற்கான இடமொன்றைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டு வரும் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், குறித்த பிரதேசத்துக்கு கள விஜயம் ஒன்றை, கோடீஸ்வரன் எம்.பி, அண்மையில்  மேற்கொண்டார்.

அங்கு கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட எம்.பி, மேற்படிப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், தங்கவேலாயுதபுரம் கிராமத்துக்குச் செல்லும் காட்டை அண்மித்த பகுதியிலுள்ள சுமார் 04 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே, மேற்படி கருத்தை எம்.பி தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இங்கு எல்லைக் கற்கள் இடப்பட்டுள்ள காணிகள், சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இப்பிரதேச மக்கள் விவசாயம் மேற்கொண்டு வரும் காணிகள் எனவும் இந்தக் காணிகளை, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரோ அல்லது திருக்கோவில் பிரதேச செயலாளரோ, வனபரிபாலனத் திணைக்களத்தினருக்கு இன்னும் கையளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்விவசாயக் காணிகள், 2010, 2011 ஆண்டு காலப்பகுதியில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் எல்லைகள் பிரசுரிக்கப்படாதுள்ள போதிலும் வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் இங்கு வந்து எல்லைக் கற்களை இட்டு, விவசாயிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றார்கள் எனவும் அவர் ​மேலும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X