2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீடுகளை பகிர்ந்தளிக்க நேர்முகத்தேர்வு

வி.சுகிர்தகுமார்   / 2017 நவம்பர் 29 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சுனாமி நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்காக பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம், ஜனாதிபதியின் உத்திரவுக்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, பயனாளிகளை தெரிவுத் செய்யும் நேர்முகத்தேர்வுகளும் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்களுக்கான நேர்முகத்தேர்வு, உதவிப்பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் நேற்று (28) நடைபெற்றது.

இந்நேர்முகத்தேர்வில் 110 பயனாளிகள் கலந்துகொண்ட நிலையில், குடும்ப நிலை அடிப்படையில் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.

மாவட்டத்தின் உதவி காணி ஆணையாளர் இப்திகார் பாணு மற்றும் மாவட்ட காணி உத்தியோகத்தர் கே.எல்.எம்.முசாமில் உள்ளிட்ட பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் நேர்முகத்தேர்வை நடத்தி வைத்தனர்.

சுனாமியின் பின்னர் சவூதி அரேபியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 40ஏக்கர் காணியில் 500 வீடுகள் இவ்வீட்டுத்திட்டத்தின் மூலம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

ஆனாலும் பல வருடங்களாக இவ்வீட்டுத்திட்டம் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்படவில்லை.

 இந்நிலையில் இவ்வருடம் டிசெம்பர் மாதத்தினுள் அனைத்து வீடுகளும் மூவின மக்களிடையே பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டமையானது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .