2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீதிகளுக்கு கொங்கிறீட் இடும் நடவடிக்கை

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.நிப்றாஸ், ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை, தைக்காநகர் பிரதேசத்தில், நீண்டகாலமாகத் திருத்தப்படாதிருந்த சில வீதிகளைப் புனரமைத்து, கொங்கிறீட் இடும் நடவடிக்கைகள், இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால் ஒதுக்கப்பட்டுள்ள 10 மில்லியன் ரூபாய் நிதியில், இந்த வீதிகள் கொங்கிறீட் இடப்படவுள்ளன என்றும், தன்னால் விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து, இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எம்.ஐ. உதுமாலெப்பை தெரிவித்தார்.

அக்கரைப்பற்றுக்கும் அட்டாளைச்சேனை நகர்ப்பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள தைக்காநகர் பிரதேசத்தில் வீதிகள், வடிகான்கள் சேதமடைந்திருந்த நிலையில், அபிவிருத்தி விடயங்களில் கைவிடப்பட்ட பிரதேசமாகவும் காணப்பட்டது என்றும், இதனையடுத்து தேசிய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்களான இப்பிரதேசவாசிகள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே, இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .