2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி கையெழுத்து திரட்டல்

Editorial   / 2019 ஜூலை 21 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

  எம்.எஸ்.எம். ஹனீபா

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அழுத்தம்  கொடுக்கும்                                                                                                                                     வகையில்  வேலையற்ற பட்டதாரிகளிடமிருந்து எதிர்வரும் 28ம் திகதி கையெழுத்து திரட்டவுள்ளதாக தெரிவித்த, அம்பாறை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் ஏ.எச். ஜெஸீர்  ,வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுவதில் கடந்த அரசாங்கத்தைப் போன்று அல்லாமல் இவ் அரசாங்கம் பாராபட்சம் காட்டுவதாகவும், பட்டதாரிகள் நியமனங்களுக்கு விண்ணப்பித்து போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து பல தடவைகள் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியவர்களுக்கு கடந்த 06 வருடங்களாக நியமனம் வழங்குவதில் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாகவும், நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தார்.

 அரசியல் வாதிகள் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டும் இது வரையில் பட்டதாரிகளுக்கான  அரச நியமனங்கள் வழங்கப்படாமை இழுத்தடிக்கப் படுகின்றமை கண்டிக்கத்தக்கதாகுமென்றார்.

பல போராட்டங்கள் நடாத்தியும் அரசாங்கம் கவனிக்காமல் இருப்பது மனவேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்ட ஒன்றியத்தின் தலைவர் ,வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இதில் உள்வாரி, வெளிவாரி என பார்க்காமல் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

நாட்டில் சுமார் 56 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு பட்டம் பெற்ற ஆண்டு மற்றும் வயதை கவனத்திற்கொண்டு வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும்எனவும், வேலையற்ற பட்டதாரிகளிடமிருந்து திரட்டப்படும் கையொப்பம் அடங்கிய மகஜர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், தலைவர் ஏ.எச். ஜெஸீர்  தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .