2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலையில் நஞ்சற்ற மரக்கறி உற்பதி

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கையின் அறுவடையும் விற்பனையும், வைத்தியசாலை வளாகத்தில் இன்று (19) இடம்பெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சத்திர சிகிச்சை நிபுணர் கே.ரவீந்திரன், உளவளத்துணை வைத்திய நிபுனர் எம்.ஜே.நௌபல் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

தேசிய உணவு உற்பத்தியை அதிகரிப்பதும், நஞ்சற்ற சுத்தமான போஷாக்கான உணவுப் பழக்கவழக்கத்தை ஏற்படுத்துவதுடன், தமக்கான உணவைத் தாமே உற்பத்தி செய்து போஷனை மட்டத்தையும் அதிகரிக்கச் செய்வதே, இதன் பிரதான நோக்கமாகுமென, வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹீர் தெரிவித்தார்.

வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பயிர்க்கன்றுகள் இதன்போது இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X