2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உள்ளுர் வாழ்வியல் முறைகளும் எதிர்கொள்ளும் சவால்களும்

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளுர் அறிவு முறையியலும் அதன் பரவலாக்கமும் என்பது மனிதத்; தேவைகளை அடிப்படையாகக் கொண்டவை. அறிவு முறையியல்கள், உள்ளுர் நம்பிக்;கைகளாக வீடுகளில் வாழ்வில் இயல்பாய் கடைப்பிடிக்கப்படுபவை. பெண்வழி ரீதியான கடத்தலையும் தொடர்பையும் கொண்டவையாகக் காணப்படுபவை. 

குறிப்பாக சமையல் முறைகள், கைவைத்தியம், வேம்பு, மஞ்சள், நன்னாரி, இஞ்சி போன்றவை சாதாரண உணவுப்பழக்கத்திலும் அத்துடன் வாழ்வியலிலும் கடைப்பிடிக்கப்படுவை. மல்லி, சுக்கு, திப்பிலி கொண்ட கசாயம் அருந்தல் போன்ற பழக்கவழக்கங்கள் வாசலில் மஞ்சள் நீர் தெளித்தல், வேப்பம் இலை சடங்குகளிலும் நுளம்பு, கொசுக்களை விரட்டவும் பயன்படுத்தப்படுபவை. 

இத்தகைய வாழ்வியல் முறையைக் கொண்டதாகவே நமது வாழ்வியல் இருந்து வந்துள்ளது. 
உள்ளுர் பொருளாதார முறையில் சிறுஉற்பத்தி, வீட்டுத்தோட்டம், பண்டமாற்றல் முறை என்பவை சாதாரணமாக உள்ளுர்களில் இருப்பவை. தங்களி;டம் விளைந்தவற்றைக் கொடுத்து தங்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 

தங்களது உற்பத்தியில் ஒரு பகுதியைக் கொடுத்து அதற்குப் பதிலாய் வேறு ஒரு பொருளைப் பெறுவது என்பது இலகுவாய் மக்களிடமிருந்த பழக்கமாகும். இதற்கான முறையியல் ஒவ்வொரு கிராமத்திலும் காணப்படுகின்றது. இங்கு மனிதத்தேவை என்பதே முக்கியமானதாக காணப்படுகின்றது. மனிதர் ஒவ்வொருவரும் தன் உற்பத்தியை பகிர்ந்தளிப்பவராக காணப்படுகின்றனர். 

இப்பொருளாதாரம் என்பது பண்பாட்டில் இணைந்ததாய் மக்களின் நம்பிக்கைகளுடன் இணைந்ததாய் வாழ்வில் கடைப்பிக்கப்பட்டு வந்துள்ளது. சடங்குக் கோயில் காலங்களில் மட்பாண்ட பொருள்;கள் அதிகம்; உற்பத்தி செய்யப்படல் போன்றவறறை குறிப்பிடலாம். 

இத்தகைய வாழ்வியலில் இருந்து விடுபடுவததற்கான மாற்றங்கள் வீட்டில் பாவிக்கப்படும்; பொருள்களில் இருந்து நமது உணவுசார் பண்பாடு, பண்பாட்டு நடவடிக்கைகளிலும் ஏற்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் காணலாம்.  

இத்தகைய மாற்றங்கள் நம்முடைய வாழ்வில் மிக பாரிய தாக்கங்களை செலுத்தி வந்திருப்பதுடன் வாழ்வியலை, சிந்தனைப் பரம்பலை முமுமையாக மாற்றியுமுள்ளது என்பதை அறிந்தும் அத்தகைய மாற்றங்கள் இக்காலத்தின் வாழ்வின் தேவையாக உணரச்செய்யப்பட்டு வந்துள்ளமையையும் நாம் அவதானிக்கலாம். 

இத்தகைய வாழ்வியலை பொருத்தமற்றதாய் இக்காலத்துக்கு ஏற்றதற்றதாய் காலனிய சிந்தனை, முதலாளிய பொருளாதார முறை, உலகமயமாக்கல் போன்றவை இல்லாமல் செய்திருக்கின்றன. அதிக முதலீடு, இலாபம், உபரி, என்னும் முதலாளிய பொருளாதாரமுறை, உள்ளுர் நம்பிக்கை, அறிவு, பொருளாதாரமுறை போன்றவற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியதைக் காணலாம். 

சிறு உற்பத்தி பொருளாதார முறை, பாரிய இலாமீட்டலில் கவனிக்கபடாத ஒன்றாய் ஒதுக்கிவிடப்பட்டது. பாரிய உற்பத்தி முறையியல் உள்ளுர் பொருளாதார முறையின் சிறு உற்பத்திச் சந்தைகளை இல்லாமல் செய்தும் ஆக்கிரமிப்பும் செய்தது. 

குறிப்பாக உள்ளுர் பொருளாதாரமுறை என்பது தேயை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியாய் காணப்பட முதலாளிய பொருளாதாரம் இலாபமீட்டலை உபரியை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியாய் காணப்பட்டது. அதிக உற்பத்திக்கான சந்தை என்பது அவசியதானது. எனவே சிறு உற்பத்திகளின் சந்தைகளை ஆக்கிரமிப்புச் செய்தது. இவ் ஆக்கிரமிப்பு என்பது எமது கல்வி, இலத்திரனியல் ஊடகங்கள், விளம்பரங்கள் வாயிலாக செயற்படுத்தின. 

குறிப்பாக உள்ளுர் உற்பத்திகள் தரமற்றவை, போசாக்கற்றவை, நீண்டபாவனைக்குரியதல்ல, இலகுவாய் ( காலடியில்) பெற்றுக்கொள்ள முடியாது போன்ற கருத்துப்பரவல் செய்யப்பட்டது. முதலாளிய உற்பத்தி;கள் சிறு சிறு சந்தைகளிலும் இடம்பிடித்தன. மனிதத் தேவைகளை நிர்ணயிப்பது முதலாளிய கைகளுக்குச் சென்றது. நாம் எந்தப் பொருளை வாங்குவது என்பதை விளம்பரங்கள் தீர்மானித்தன. எந்தப்பொருளையும் எங்கும் வாங்க முடியும் என்னும் தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டது. 

இத்தகைய பொருளாதார முறை என்பது உள்ளுர் பொருளாதார முறை, உள்ளுர் அறிவியல் முறைகளை இக்காலத்துக்கு ஏற்புடையதற்றதாய் பயன்பாடற்றதாய் அருங்காட்சியத்துக்கும் ; பார்வையிடலுக்குமானதாய் மாற்றியது. 

இதற்கு உதவி செய்வதாய் ஊக்கப்படுத்துவதாய் எமது கல்வி அறிவு அமைந்தது. கல்வி முறை என்பது, காலனிய சிந்தனையைப் பரவலாக்கியது. எம்மை சிந்திக்க வைத்தது. இதன் உச்ச கட்டம் காலனிய அறிவின் அறவியல் கொண்டு, உள்ளுர் அறிவு முறையை ஆய்வு செய்யவும் அளவிடவும் மதிப்பீடும் செய்தும் பொருத்தமற்றவையாய் நிருபித்தது. மேற்கு ஐரோப்பிய அறிவியலின் கோட்பாட்டில் நின்று எங்களது வாழ்வியல், பண்பாடு மீண்டும் எங்களுக்கே அறிமுகம் செய்யப்பட்டது. 

இத்தகைய காலனியச் சிந்தனை முதலாளிய உலகமயமாக்கலுக்கான வித்தினை இட்டது. உலகைச் சுருக்கி உள்ளங் கைக்குள் கொண்டுவரும் முதலாளிய கனவை விதைத்தது. இதற்கு மாற்றான சிந்தனை செயற்பாடு கொண்டோர் முதலாளிய கனவுக்கு அச்சுறுத்தலானவர்கள் சூனியக்காரிகளாக, அபாயகரமானவர்களாக தீர்மானிக்கப்பட்டு இல்லாமல் செய்யப்ட்டனர். 

இவ்வாறாய் உள்ளுர் பொருளாதார முறை, உள்ளுர் அறிவு முறை இல்லாமல் செய்யப்பட்டது. நாம் நம்மீது தி;ணிக்கப்பட்ட அறிவு முறைகளை மீட்டெடுத்தலும் நம் உள்ளுர் அறிவு முறைகளை மீளவும் அனைவருக்குமானதாய் அதிகார ஆதிக்க சிந்தனை அற்றதாய் முன்வைத்தலுமே தன்னிறைவான நோயற்ற வாழ்வை நம்மிடம் உருவாக்குவதற்கான வழிவகையாக அமையும்.

கி.கலைமகள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .