2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பெண்களுக்கு அதிகாரம் இருக்கிறதா?

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். ஆனால், அதிகாரம் இருக்கிறதா? பொதுச் சமூகம் பெண்களை அதிகாரத்தில் இருப்பதை ஓரளவு ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்து காலமாகிவிட்டது. ஆனால், பெண்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கின்ற மனோபாவம், பொதுச் சமூகத்துக்கு வந்துவிட்டதா?   

அதிகாரம் செலுத்தும் நிலையை அடைவதற்காக, பெண்கள் நீண்டகாலம் போராடியிருக்கிறார்கள். இடையறாத போராட்டங்களின் விளைவாக, அவர்கள் அந்த இடத்துக்கு அதிகாரம் செலுத்தும் இடத்தில் ஒரு பெண்ணை அங்கிகரிப்பதற்கு பொதுச் சமூகம் இன்னும் தயாரில்லை என்பதை யதார்த்தமாக உள்ளது.  

தேர்தல் என்று வரும்போது, தலைவர் என்றதும் பொதுப்புத்தியில் விழுவது ஓர் ஆணின் விம்பமாகத்தான் உள்ளது. ஒரு பெண்ணைத் தலைவராக ஏற்பதற்கு, பொதுச் சமூகம் தயாராக இல்லாதபடியால்தான், நாடாளுமன்றத்துக்குப் பெருந்தொகையான ஆண்களை அனுப்பிவைக்கும் நிலை உள்ளது.   

சில நாடுகள், பெண்களை அதிகாரத்துக்கு வருவதற்கு ஊக்கமளிக்கின்றன. உதாரணத்துக்கு, ருவாண்டா நாட்டு அமைச்சரவையில், பெண்களும் சரி சமமான பங்கு வகிக்கிறார்கள். எத்தியோப்பிய பிரதமர் அபீ அஹமட், தமது அமைச்சரவையில் சரி பாதி இடங்களைப் பெண்களுக்கு வழங்கியுள்ளார்.

“ஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதாலும் அவர்கள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்த உதவுவார்கள்” என்பதாலுமே, இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் அறிவித்திருந்தார். கட்டுமானத்துறை அமைச்சராக இருந்த ஆயிஷா முஹமட், அந்நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  

ஸ்லோவெனியா நாட்டில், ஆண் நீதிபதிகளின் எண்ணிக்கையைவிடப் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகம்.  

நாம்பியா செய்தி ஊடகங்களில், பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் உயர் பொறுப்புகளில் உள்ளனர்.  
மலேசியா கணிப்பொறி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் சரி பாதிக்கும் அதிகமானவர்கள் பெண்கள். நியூசிலாந்தில் மருத்துவ ஆராய்ச்சியாளர்களில் பத்தில் ஆறு பேர் பெண்கள். ஓமன் பொறியாளர்களில், பத்தில் ஐந்து பேர் பெண்கள்.  

ருவாண்டாவில் 10க்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண்கள். ருவாண்டா தலைவர் பால், எதேச்சாதிகாரத்துடன் செயல்படுகிறார் என அவர் மீது குற்றச்சாட்டும் உள்ளது. இருந்தும், 10க்கு 6 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண்கள் என்பது நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்யும் செய்தியாக இருக்கிறது.   

இந்த நாடுகளில் சில, கல்வியில் நம்மைவிடப் பின்னால் இருப்பவை. சில, பொருளாதார வீழ்ச்சிகள் கண்டவை. சில நாடுகள், கிளர்ச்சியும் போரும் இடம்பெற்றவை. ஆனால், பெண்களுக்கு உரிமைகள் அங்கே குறிப்பிடத்தக்களவு மதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது. அதிகாரம் இருக்கிறதோ இல்லையோ, பெண்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். நம் நாட்டில் பெண்களால் அதிகாரத்துக்கு வருவதற்கே இன்னும் போராட வேண்டியே இருக்கிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .