2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

21 பேர் உயிரிழந்த சம்பவம்: பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் கே‌.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நலக் குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் கடந்த 12ஆம் திகதி ஏற்பட்ட வெடி விபத்தில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர்

கே‌.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் களுடன் நடைபெறும் நல குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 204 விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

இதில், 298 பேர் உயிரிழந்துள்ளனர். 236 பேர் காயமடைந்துள்ளனர். பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது ஆய்வு நடத்தி எச்சரிக்கையை விடுத்து வருகிறோம். விதி மீறல்கள் காரணமாகவே விபத்துகள் ஏற்படுகின்றன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .