2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

3,000 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொச்சி :

பாகிஸ்தானில் இருந்து வந்த, இலங்கைக்கு சொந்தமான மீன்பிடி கப்பலில் இருந்து, 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை, இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

கேரளா மாநிலம் கொச்சியில், அரபுக்கடல் பகுதியில், இந்திய கடற்படையினர் வழக்கமான ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, அந்த வழியாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து வந்த, இலங்கைக்கு சொந்தமான ஒரு மீன்பிடி கப்பலை, சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், 300 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு, 3,000 கோடி ரூபாய்.இதையடுத்து, மீன்பிடி கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன், கப்பலும் கொச்சி கொண்டு வரப்பட்டது. கைதானவர்களிடம், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .