2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

3ஆவது நாளாக கொட்டி தீர்த்த மழை; மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை,

மும்பையில் 3ஆவது நாளாக கொட்டித்தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. அடுத்த 2 நாள்களுக்கும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

 கொரோனா வைரஸ் பரவலால் திண்டாடி வரும் மராட்டியத்தில் மும்பை மற்றும் அதையொட்டி உள்ள கடலோர மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல்

பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மும்பை நகரம் வெள்ளக்காடானது.

நேற்றும் மும்பையில் 3ஆவது நாளாக மழை வெளுத்து வாங்கியது. அதிகாலை முதலே இடைவிடாமல் பெய்த மழை மதியம் 3 மணி வரை நீடித்தது.

இதனால் மும்பை நகரம் வெள்ளத்தில் மிதந்தது. குறிப்பாக தாழ்வான பகுதிகள் மழைநீரில் தத்தளித்தன.

இதில் மும்பை போஸ்டல் காலனி, செம்பூர், சாக்கர் பஞ்சாயத் ரோடு, வடலா மேற்கு, நீலம் ஜங்ஷன், தாராவி ரெஸ்ட்ரான்ட், அந்தேரி

மிலன் சப்வே, இந்துமாதா ஜங்ஷன், சுரனா ஆஸ்பத்திரி, செம்பூர்- சாந்தாகுருஸ் இணைப்பு பாலம், கார் சப்வே, சாய்வாடி ஜங்ஷன், அந்தேரி மார்க்கெட், அந்தேரி

சப்வே, ஷாம் தலாவ், சாய்னாத் சப்வே, மலாடு எஸ்.வி. ரோடு, தகிசர் சப்வே, மரோல் ஜங்ஷன், குர்லா பன்டர் பவன், பவாய் காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

இதேபோல நகரில் பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், குடிசைப்பகுதிகளும் தண்ணீரில் தத்தளித்தன.

பல இடங்களில் மக்கள் இடுப்பு அளவு தண்ணீரில் நடந்து செல்வதை காண முடிந்தது.

 மும்பையை பொறுத்தவரை நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நகரில் 13 செ.மீ. மழையும், புறநகரில் 20 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

இதில் அதிகபட்சமாக போரிவிலியில் 21 செ.மீ. மழையும், விக்ரோலி, செம்பூரில் 20 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

தாராவியில் 19 செ.மீ. மழை பதிவானது.தானேயில் 37 செ.மீ. மழையும், பால்கரில் 9 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

மீண்டும் கனமழை எச்சரிக்கை

இதற்கிடையே அடுத்த 2 நாள்களுக்கும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டு உள்ள

செய்திக்குறிப்பில், “மராட்டியத்தின் பல பகுதிகளில் இன்றும்(திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க் கிழமை) கனமழை தொடரும். அப்போது மணிக்கு 50 முதல்

60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். மும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி போன்ற கடலோர மாவட்டங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .