2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

7.4 கோடி ரூபாய் சர்வதேசப் பரிசு பெறும் ஆசிரியர்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் கல்வியை ஊக்கப்படுத்திய இந்தியப் பள்ளி ஆசிரியருக்கு சர்வதேச ஆசிரியர் பரிசாக ரூ.7.4 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆச்சரிய மூட்டும் விதமாகப் பரிசுத் தொகையில் 50 சதவீதத்தை இறுதிக் கட்டத்துக்குத் தேர்வான 10போட்டியாளர்களிடமும் சமமாகப் பகிர்ந்து கொள்வதாக விருதாளர் அறிவித்துள்ளார்.

இலண்டனைச் சேர்ந்த வர்க்கி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் சர்வதேச ஆசிரியர் பரிசு வழங்கப்படுகிறது. இந்த அறக்கட்டளைக்கு யுனெஸ்கோ பொருளுதவி அளித்து வருகிறது.

இந்தப் பரிசுத் திட்டத்துக்கு உலகம் முழுவதும் 140 நாடுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். இதில் இருந்து இறுதிக்கட்டத்துக்கு 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இருந்து ரஞ்சித்சிங் திசாலே தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்படுகிறது.

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சிங் திசாலே (32). 2009ஆம் ஆண்டில் சோலாப்பூர் மாவட்டம் பரிதேவாடி ஜில்லா பரிஷத் ஆரம்பப் பள்ளியில் பணிக்கு இணைந்தார் ரஞ்சித். அவர் வரும்போது பள்ளிக் கட்டிடம் பாழடைந்து மாட்டுத் தொழுவத்துக்கும் குப்பைகளைக் கொட்டி வைக்கும் அறைக்கும் நடுவில் இருந்தது. முதலில் கட்டிடத்தைச் சீரமைத்த ரஞ்சித்,

பின்னர் உள்ளூர் மொழியில் பாடப்புத்தகங்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்தார். அத்துடன் க்யூ ஆர் கோடு மூலம் மாணவர்களுக்கு ஆடியோ, வீடியோ வடிவிலும் பாடங்களை ஒருங்கிணைத்தார்.

இதன் மூலம் கிராமத்தில் குழந்தைத் திருமணங் களைத் தடுத்து நிறுத்தினார். 100 சதவீதம் பெண் குழந்தைகளின் பள்ளி வருகையை உறுதி செய்தார். ரஞ்சித்தின் பள்ளி அடைந்த வளர்ச்சி, மற்ற கிராமப் பள்ளிகளுக்கும் முன்னுதாரணமாக இருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X