2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரு நாடுகளுக்கும் இடையே இன்று முக்கிய ஒப்பந்தம்

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 புதுடெல்லி

இந்திய, அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் டெல்லியில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாதுகாப்புத் துறை தொடர் பாக இரு நாடுகளுக்கும் இடையே இன்று

முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் 2 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தனர்.

இந்நிலையில், மார்க் எஸ்பர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்துப் பேசினார்.

இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், இராணுவ தளபதி முகுந்த் நராவனே, விமானப் படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, உளவு தகவல்கள் பரிமாற்றம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தையில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. 

மேலும் பசிபிக் கடல், இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .