2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

Black stone நிறுவனம் இந்தியாவில் முதலீடு

Editorial   / 2021 மே 05 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் முதலீட்டாளர்களாக பிளக் ஸ்டோன் ( Black stone) நிறுவனத்தினர் திகழ்கின்றனர்.

ரியல் எஸ்டேட் துறையில் சிறந்து விளங்கும் இந் நிறுவனமானது  கடந்த தசாப்தத்தில் மாத்திரம் இந்தியாவில்  22 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் தற்​போது மேலும் அதிகமாக இந்தியா மீது முதலீடு செய்யவுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
அந்தவகையில் இது குறித்து அந் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீபன் ஏ ஸ்வார்ஸ்மேன் (Stephen A Schwarzman) கருத்துத் தெரிவிக்கையில்  ” இந்தியாவின் மீது முதலீடு செய்வது என்பது இலாபம் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.
இதன் காரணமாக தற்போது 50 பில்லியன் டொலர்களுக்கு மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். 
மேலும், இந்தியாவில் தற்போது கொரோனாத் தொற்றானது தீவிரமாகப் பரவி வருவதால் அங்கு சுகாதார சேவைகளை வழங்குவதற்கும், ஒட்சீசன் செறிவூட்டிகள் மற்றும் வென்டிலேட்டர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான துறைசார் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கும் நாங்கள் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவித்தொகையாக வழங்க தீர்மானித்துள்ளோம்” என்றார்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X