2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால் பெயரும் தரமும் போய்விடும்

A.K.M. Ramzy   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 16ஆம் திகதி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை, நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர்

'அண்ணா தொழில்நுட்பம்'  மற்றும் 'ஆராய்ச்சி பல்கலைக்கழகம்' என்றும், புதிதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு, அண்ணா பல்கலைக்கழகம் என்று

பெயர் சூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள்

பேராசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “எம்ஜிஆரால் துவங்கப்பட்ட அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

பழம்பெருமை வாய்ந்தது. அதன் பெயரை மாற்றினால் உலகளவில் அதற்குரிய பெயரும் தரமும் போய்விடும்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், “பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்தால் அதன் கீழ், ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு உரிய நிதி கிடைக்காது.

மாணவர்கள் எந்த பல்கலைக்கழகத்தின் கீழ் தேர்ச்சி பெற்றார்கள் என்ற குழப்பம் நீடிக்கும்.

முன்னணி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கேள்வி குறியாகும்.

பல்கலைக்கழகத்தை பிரிக்கும் முடிவை அரசு கைவிட்டு அதன் புகழையும், கௌரவத்தையும் தக்கவைக்க வேண்டும்.

எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது” என்று அரசுக்கு உத்தரவிடக் கோரி கடிதத்தில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .