2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அரசுடன் இணைந்து போராட தி.மு.க. தயார்

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

  சென்னை: 

மாநில உரிமைகளுக்காக அ.தி.மு.க. அரசுடன் இணைந்து போராட, தி.மு.க. தயாராக இருப்பதாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி, திமுக தலைவர் ஸ்டாலின் புதனன்று ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட் டுள்ள பதிவில்,‘மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைத்துக்கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றி

அனுப்பிய பிறகும், தமிழக ஆளுநர் இன்னும் அதற்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வருகிறார்.

மசோதாவுக்கு உரிய அங்கிகாரத்தை ஆளுநர் உடனடியாக வழங்க வேண்டும்

என்று அவருக்கு இன்று கடிதம் எழுதி உள்ளேன். இது மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டு, அமைக்கப்பட்டிருக்கும் சட்டமன்றத்தின் உரிமை மற்றும் அதிகாரம்

சம்பந்தப்பட்டதாகும். ஆளுநர் இதில் மேலும் பாராமுகமும் தாமதமும் காட்டுவது நல்லதல்ல. இந்த நேர்வில், மாநில உரிமைகளுக்காக அ.தி.மு.க. அரசுடன்

இணைந்து போராட, தி.மு.க. தயாராக இருக்கிறது. எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், உடனடியாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசி,

என்னவகைப் போராட்டம், எந்த நாளில் என்பதை முடிவு செய்து அறிவித்திட  முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!’ என்று தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .