2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது

A.K.M. Ramzy   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,810க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.38,480க்கும் விற்பனை செய்யப்பட் டுகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ.992 குறைந்ததால், நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்து வருகிறது. வெள்ளி விலை கடந்த 3 நாள்களில் கிலோவுக்கு ரூ.7100 குறைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .