2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 புதுடெல்லி,

இந்திய அணியின் முன்னாள் கெப்டன் கபில் தேவ் (வயது 61) கடந்த சில நாள்களுக்கு  முன்பு உடல்நலக்குறைவு மற்றும் நெஞ்சுவலி காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கு அவருக்கு   அறுவை சிகிச்சை நடந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து, மருத்துவமனையில் சில நாள்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது குணமடைந்து வீடு திரும்பி யுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "தான் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக" கூறியுள்ளார்.

மேலும்  கூறியதாவது,"முன்பைவிட தற்போது, தான் மிகவும் நலமாக இருப்பதாகவும், விரைவில் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும்" தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .