2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை

A.K.M. Ramzy   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டப் பேரவைக்குள் குட்கா பொருள்களை எடுத்துச் சென்ற விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு, உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்ததில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளி ட்டப் பொருள்களைச் சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம்

ஏற்படுத்தியதாகக் கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப் பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீ ஸை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளன.

இந்த நோட்டீசின் அடிப்படையில், மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

இதன்பின்னரும், மனுதாரர்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாக கருதி, உரிமைமீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து உரிமை மீறல் குழு கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.

இதனை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணை க்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் இதுதொடர்பாக பேரவைத் தலைவர், பேரவைச் செயலாளர், உரிமை மீறல் குழு, குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோபர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .