2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி

A.K.M. Ramzy   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:

டைம் பத்திரிகையின் ‘100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020’ பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார்.'தலைவர்கள்' பிரிவில் இடம்பெற்ற இந்தியாவைச் சேர்ந்த ஒரே அரசியல்வாதி பிரதமர் மோடி ஆவார்.

மற்ற உலகத் தலைவர்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்; சீன அதிபர் ஜி ஜின்பிங்; 2020 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு ஜனாதிபதி சவால் விடுக்கும் ஜோ பிடன்; 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்கான அமெரிக்க ஜனநாயக

துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென்; ஜெர்மன் ஜனாதிபதி அங்கேலா மெர்க்கல்; மற்றும் அமெரிக்க தேசிய

ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் நிறுவனத்தின் இயக்குனர் டொக்டர் அந்தோனி பாசி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

செல்வாக்கு மிக்க மக்கள் பட்டியலில் பிரதமர் மோடியைக் சேர்த்து உள்ள போதும் இந்தியாவின் பிரதமராக மோடி, இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை "சந்தேகத்துக்கு உள்ளாக்கியுள்ளார்",

அங்கு "கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பிற மத பிரிவுகள் அனைத்துமே உள்ளனர்.

எவ்வாறாயினும், இந்து-தேசியவாதி என்று முத்திரை குத்தப்பட்ட பிரதமர் மோடியின் பாரதீய ஜனதா கட்சி, இந்தியாவின் முஸ்லிம்களைக் குறிவைத்து உயரடுக்கு மட்டுமல்ல, பன்மைத்துவத்தையும் நிராகரித்துள்ளது" என்று பிரதமர் மோடி குறித்து ஆசிரியர் கார்ல் விக் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதத்தி பிரதமர் குறித்து எழுதிய  கட்டுரையில் டைம் இருந்தது "இந்தியாவின் வகுப்புவாத தலைமை என குறிப்பிட்டு இருந்தது. 

இருப்பினும், சில வாரங்களுக்குப் பிறகு, அதே பத்திரிகை ‘ஐக்கிய இந்தியா பல தசாப்தங்களில் மோடி  போல் எந்த பிரதமரையும் பார்த்தது இல்லை'என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .