2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விஜயகாந்த் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்

A.K.M. Ramzy   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலன் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

இது குறித்து முதல்வர் பழனிசாமி  கூறியிருப்பதாவது; தேசிய முற்போக்கு திராவிட

கழக நிறுவனர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, இன்று காலை

அவரது மனைவியும்  அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திடம், விஜயகாந்த்  உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன்.

விஜயகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து தேமுதிக கட்சித் தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், கழக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக 6 மாதத்துக்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்து வமனைக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்த்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது.

தற்போது பூரண உடல் நடத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .