2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீன வீரரை ஒப்படைத்தது இந்திய இராணுவம்

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

லடாக்,

லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்த பகுதியில் இந்தியா- சீன வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், அங்கு ஏற்பட்ட பதற்றத்தைக் குறைக்க இரு நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். .

இச்சூழலில் லடாக்கின் கிழக்குப்பகுதியில் உள்ள டெம்சாக் பகுதியில், சீன வீரர் ஒருவர் எல்லை தாண்டி வந்தார். அவரை பிடித்து இந்திய வீரர்கள் நடத்திய

விசாரணையில், அந்த சீன வீரரின் பெயர், வாங் யா லாங் என்பதும், அவர் தவறுதலாக இந்திய பகுதிக்குள் வந்ததாகவும் தெரியவந்தது.

தொடர்ந்து அவருக்கு, ஒக்ஸிசன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள், உணவு, உடை போன்றவை இந்திய இராணுவத்தால் வழங்கப்பட்டன.

இந்நிலையில் எல்லை தாண்டி வந்த சீன வீரர் வாங்க் யா லாங்கை, சுசூல் மோல்டோ என்ற இடத்தில் அந்நாட்டிடம் இந்திய இராணுவம் ஒப்படைத்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X