2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

முன்னாள் முதலமைச்சர் அப்துல்லாவிடம் மீண்டும் விசாரணை

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீநகர்,

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லாவிடம் மாநில கிரிக்கெட் அமைப்பின்

நிதியைமுறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அமுலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை  நடத்தினர்.

காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக, ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நிதி உதவி வழங்கி வந்தது.

கடந்த 2005-2006 நிதியாண்டு முதல் 2011-2012 நிதியாண்டு வரை ரூ.94 கோடியே 6 இலட்சத்தை கிரிக்கெட் சபை அளித்தது.

இப்பணத்தில் ரூ.43 கோடியே 69 இலட்சம் கையாடல் நடந்ததாக, ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

பின்னர், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி. உட்பட 6 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சி.பி.ஐ. வழக்கின் அடிப்படையில், இதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமுலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது. 

அந்த வழக்கு தொடர்பாக, பரூக் அப்துல்லாவிடம் அமுலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை அன்று விசாரணை நடத்தினர்.

அவரது வாக்குமூலத்தை சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X