2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அ.தி.மு.க. பதவியால்தான் ஆட்சியில் இருக்கிறது

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 16 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னன்

பதவியால்தான் அ.தி.மு.க. 4 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறது. அதை நல்லபடியாக செய்து இருக்கிறார், எடப்பாடி பழனிசாமி.

துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு பெரிய ஆளுமை மறைந்த பிறகு இந்த அளவுக்கு திறமையாக 4 ஆண்டுகளை நிர்வகித்து இருக்கிறார் என்றால் சுக்கிரதிசையை தவிர அவருக்கு ஒரு ஆளுமை உள்ளுக்குள் இருப்பது வெளியே தெரிந்து கொண்டு இருக்கிறது. மக்களை ஈர்க்கக்கூடிய திறமை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் கிடையாது. இந்த சமயத்தில் தான் ரஜினியை எதிர்பார்த்தோம்.

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பா.ஜ.க. பெரிய வளர்ச்சி அடையக்கூடிய கட்சியாக இருக்கும். சாதி கட்சிகள் தமிழகத்தில் உருவாக திராவிடம் தான் காரணம்.

யாரை வைத்து தி.மு.க.வை விலக்குவது என்பதற்கு அருண்ஷோரி அன்றைக்கு கூறிய பதிலான, ‘வீடு பற்றி எரிகிறது. கங்கை நீருக்கு காத்திருக்க முடியாது.சாக்கடை நீரையும் வாரி வீசுவோம்' என்பதையே நான் இப்போது கூறுகிறேன். அதேபோன்று தான், சசிசகலாவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, ஒரு அணி (அ.தி.மு.க.) என்று திரளும்போது கங்கை நீருக்கு மட்டும் காத்திருக்க முடியாது. எல்லா நீரையும் ஏற்றுக்கொள்ளவேண்டியது இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.

தமிழகத்தில் ஊழலை பொறுத்தமட்டில் 2 கட்சிகளுக் கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. ஒன்று குடும்ப ஊழல். இன்னொன்று கூட்டு கொள்ளை. அ.தி.மு.க. கொரோனாவை எதிர்கொண்ட விதம் பாராட்டத்தக்கது. எடப்பாடி இரவு, பகல் பாராமல் உழைத்து இருக்கிறார். சூரப்பாவை பழிவாங்கி இருக்கிறார்கள். அதற்கு இந்த அரசு அவமானப்படவேண்டிய காலம் வரும். இன்னும் 3 ஆண்டுகளில் பா.ஜ.க. தமிழகத்தில் பெரிய சக்தியாக மாறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .