2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘அச்சம் தவிர்’

Editorial   / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொச்சி.

இந்தியாவில் இதுவரை 10 கோடிப் பேருக்கும் மேல் கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மாபெரும் திட்டமானது அரசுக்கு மிகப் பெரிய பொறுப்பை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ள கொச்சியிலுள்ள குழந்தைகள் மருத்துவர் கே.ஆர்.ஆண்டனி,, தடுப்பூசிகளால் ஏற்படக்கூடிய தீங்குகளையும் உபவிளைவுகளையும் கண்காணிக்கும் பெரும் பொறுப்புதான் அதுவாகும் என்றார்.

“தடுப்பூசியால் தனக்கு ஏற்படக் கூடிய எந்தத் தீங்குக்கும் எதிராக, எதிர்பாராத மரணம் உட்பட, பொறுப்புள்ள ஓர் அரசாங்கம் தன்னைக் காக்கும் என்று சாதாரண மனிதர் அதனைச் சார்ந்திருக்கிறார். மார்ச் இறுதிவரை தடுப்பூசி  போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து 617 மோசமான விளைவுகளும் 180 இறப்புகளும் ஏற்பட்டாலும் அவற்றில் எதுவும் கரோனா தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தப்படவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட மரணங்களைப் பற்றி விசாரிப்பதற்கும் முன்னே, பிணக்கூறாய்வு செய்வதற்கும் முன்னே ‘தடுப்பூசிக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று முந்திக்கொண்டு கூறிவிடுவது வழக்கமாக உள்ளது எனத் தெரிவித்த அவர்,. சுகாதாரத் துறையின் இணையதளம் வாயிலாக 15க்கும் குறைவான இறப்புகள் பொதுமக்களுக்குத் தெரியவந்திருக்கின்றன. இறப்பின் நேரம், தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கும் இறப்புக்கும் இடையிலான நேரம் ஆகியவை குறிப்பிடப்படவில்லை. தடுப்பூசிக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட நேரத்தைத் தெரிந்துகொள்வது முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .