2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்தியாவில் பிரமாண்ட வரவேற்பு

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஹமதாபாத்

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா வந்தடைந்தார். பிரதமர் மோடி  நேரில் வரவேற்றார்.

அஹமதாபாத்  நகரில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்  மனைவி மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அஹமதாபாத் வந்தடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் செல்லும்போது,பாதையோரமாக மக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். 

வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதன் பின்னர், மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர், ஆசிரமத்தில் காந்தி பயன்படுத்திய பொருள்களைப் பார்த்துவிட்டு, பார்வை யாளர்கள் பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார்.

அமெரிக்க  ஜனாதிபதி  டொனால்  ட்ரம்பும்  மனைவி மெலானியாவும் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள ராட்டையில் நூல் நூற்றனர். அப்போது ராட்டை குறித்து பிரதமர் மோடி அவருக்கு விளக்கம் அளித்தார்.

பின்னர், மதியம்  அஹமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்குச் சென்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .