2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசு மருத்துவமனைகளில் ஒக்சிஜன் குழாயமைக்க ரூ.75.28 கோடி நிதி ஒதுக்கீடு

A.K.M. Ramzy   / 2020 ஜூலை 01 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

அரசு மருத்துவமனைகளில்  ஒக்சிஜன் குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.75.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு முதல்வர்

ஆணையொன்றைப் பிறப்பித்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 1) வெளியிட்ட

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளயதாவது; "தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முதல்வர் தலைமையில் கொரோனா   தொற்று தடுப்பு மற்றும் மேலாண்மை பணிகளைத்

தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசு  உள்கட்டமைப்புகள்  மற்றும் மனித வளத்தை மேம்படுத்துதல் பணிகளை

தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  தவிர, விலை மதிப்பற்ற உயிர்களை காக்கும் உயர்தர ஊசி, மருந்துகளையும் தருவித்து, மாவட்ட அளவில் இருப்பில் வைத்து

கொரோனா சிகிச்சை முறைகளை வலுவூட்டி வருகிறது. இதன் ஓர் அங்கமாக  ஒக்சிஜன் செல்லும் குழாய்களை பொதுப் பணித்துறையின் மூலம் அமைப்பதற்கு

முதல்கட்டமாக ரூ.75.28 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டில் 59 அரசு மருத்துவமனைகளில் ஒக்சிஜன் செல்லும்

குழாய்கள் அமைப்பதற்கும், சலவையகம், மத்திய கிருமி நீக்க மய்யம் ஆகியவற்றை வலுப்படுத்தவும் பயன்படுத்தப் படும். தமிழ்நாடு முதல்வரின்

இம்மக்கள் நலன் காக்கும் பணிகள் தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையை மேலும் வலுப்படுத்தும்"இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X