2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்திய பெண்ணுக்கு அமெரிக்காவில் முக்கிய பதவி

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 18 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு ஆட்களை நியமனம் செய்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் மூத்த தூதரக அதிகாரியுமான உஸ்ரா ஜியா என்ற பெண்ணுக்கு வெளியுறவுத்துறையில் முக்கிய பதவியை ஜோ பைடன் வழங்கியுள்ளார். சிவில் பாதுகாப்பு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணைச் செயலாளராக உஸ்ரா ஜியா நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளியுறவுத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற உஸ்ரா ஜியா 2014 முதல் 2017 வரை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணை தலைவராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு அமைதி கட்டமைப்பிற்கான கூட்டணியின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் ஜனாதிபதி டிரம்பின் வெளியுறவு கொள்கைக்கு எதிராக தனது பதவியை ராஜினாமா செய்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X