2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 16 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:

  பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 9ஆம் திகதி  உயர்மட்ட குழுவினருடன் ஆய்வு செய்ததன் பின்,   16ஆம் திகதி  இன்று  முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டு ள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

முதல்கட்டமாக, சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான முன்கள பணியாளர்கள் சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்ததாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கு போடப்ப டும் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான செலவை மத்திய அரசே ஏற்பது குறிப்பிடத்தக்கது.உலகிலேயே மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா இன்று தொடங்குகிறது.

இன்று முதல் நாடு முழுவதும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்த மாபெரும் திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X