2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியாவில் உயிரிழப்பு 17; பாதிக்கப்பட்டோர் 724 ஆக அதிகரிப்பு

Editorial   / 2020 மார்ச் 27 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

 கொவிட்-19  தாக்கம், இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் அந்த நோய்க்கான உயிரிழப்பு 17 ஆக அதிகரித்து ள்ளது.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 724 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காலை 9.15 மணி நிலவரப்படி மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். குஜராத் மாநிலத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் 2 பேரும், மத்தியப் பிரதேசம், தமிழகம், பிஹார், பஞ்சாப், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

புள்ளிவிவரங்கள்படி நாட்டில் மொத்தம் 640 பேர் கொவிட்-19 வைரஸால் பாதி்க்கப்பட்டுள்ளனர். 66 பேர் கொவிட்-19 நோயினால் குணமடைந்து சென்றுள்ளனர். ஒருவர் இடம் பெயர்ந்துள்ளார்,

ஆனால், ஒட்டுமொத்தமாக 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 47 பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 3 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் வெளிநாட்டினர்.

கர்நாடக மாநிலத்தில் 55 பேரும், தெலங்கானாவில் 10 வெளிநாட்டினர் உள்பட 44 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் 43 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் 41 பேரும் பாதிக்கப்பட்டுள்னர்.

சண்டிகர் மாநிலத்தில் 7 பேரும், சத்தீஸ்கர், பிஹார் மாநிலத்தில் 6 பேரும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 5 பேரும் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .