2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

உத்தவ் தாக்கரேக்கு சோனியா நிபந்தனை

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா, ஷிவ்சேனா கூட்டணி வெற்றிபெற்றது. ஆனால் முதலமைச்சர்

பதவியை இருகட்சிகளும் தலா 2 ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஷிவ்சேனாவின் கோரிக் கையைப் பாரதீய ஜனதா நிராகரித்தது.

இதனால், பாரதீய ஜனதாவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட ஷிவ்சேசேனா, கொள்கையில் மாறுப்பட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன்

தேர்தலுக்கு பிந்தைய  கூட்டணி வைத்து கடந்த நவம்பர் மாதம் ஆட்சி அமைத்தது. ஷிவ்சேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

இந்துத்வக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினையில் கூட்டணி கட்சிகள் இடையே அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரையும்  உத்தவ் தாக்கரே அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வரும் அசோக்

சவான் தனது சொந்த மாவட்டமான நாந்தெட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பரபரப்பாக பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “அரசமைப்புச் சட்டப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக உத்தவ் தாக்கரேயிடம் எழுதி வாங்கி கொள்ளுமாறு சோனியா காந்தி எங்களிடம் தெரிவித்தார்.

அதனை நாங்கள் உத்தவ் தாக்கரேயிடம் தெரிவித்தோம். எதிர்பார்ப்புக்கு விரோதமாக அரசு செயல்பட்டால், ஆட்சியில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் வெளியேற வேண்டும் என்றும் சோனியா எங்களிடம் தெரிவித்தார்.

அதனையும் உத்தவ் தாக்கரே கவனத்துக்கு கொண்டு சென்றோம். இவற்றை உத்தவ் தாக்கரே ஏற்றுக்கொண்டதால், ஆட்சி அமைய நாங்கள் ஆதரவு அளித்தோம்” என்றார்.

அசோக் சவானின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆட்சி அமைப்பதற்காக நடந்த உள் ஒப்பந்தங்கள் குறித்து ஷிவ்சேனா விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .