2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உருமாறிய கொரோனாவை தடுக்க தமிழகத்தில் தீவிரம்

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாகவும் மகாராஷ்டிரா மற்றும் தென் மாநிலங்களில் என் 440கே என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதாகவும் ஆராய்ச்சியா ளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த உருமாறிய கொரோனா தமிழகத்தில் உள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் இங்கிலாந்து உட்பட பல நாடுக ளில் உருமாறி உள்ளது. இந்தியாவிலும் இது உருமாறி உள்ளதாக தகவல் வருகிறது. கொரோனா மட்டுமல்ல எந்த வைரசாக இருந்தாலும் உருமாறுவது வழக்கம்தான்.

ஆர்.என்.ஐ.நுண் கிருமிகள் மாதம் இரண்டு முறை உருமாறும். ஆனால், இந்தியாவில் உருமாறுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்களே தவிர அதற்கான புதிய சிகிச்சை மாற்றத்தை யாரும் அறிவிக்கவில்லை.

பொதுவாக வைரசிடம் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முக கவசம் அணிவது தான் சிறந்த தடுப்பு நடவடிக்கையாகும்.

தமிழகத்தில் கொரோனா ஆரம்பத்தில் இருந்ததை விட படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு குறைந்துவிட்டது. ஆனாலும் 500 க்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு அதன் பிறகு இன்னும் படிப்படியாக குறையாமல் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

சென்னையில் ஒரு சிலர் முக கவசம் அணிகின்றனர். ஆனால், தென் மாவட்டங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் முககவசம் அணிவதை விட்டுவிட்டனர். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கூட மாஸ்க் அணியாமல் செல்வது தற்போது அதிகரித்து வருகிறது.கொரோனா இனி நமக்கு வராது என்ற நினைப்பில் பலர் கவனக்குறைவாக உள்ளனர். அது தவறு. தற்போது தேர்தல் காலமாக உள்ளதால் பல நிகழ்ச்சிகள் கூட்டம், கூட்டமாக நடத்தப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X