2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஊரடங்கு உத்தரவை மீறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்கு

Editorial   / 2020 மார்ச் 27 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரி,

 கொவிட்-19  பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  இந்தநிலையில் தடை உத்தரவை மீறியதாக வியாபாரிகள், இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் என மாநிலம் 

முழுவதும் 58 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2-ம் நாளான நேற்று 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ள்ளது. அதையும் மீறி வீட்டை விட்டு வெளியே

வருபவர்கள் மீதும், கடைகளைத் திறந்து வைத்து கூட்டத்தை கூட்டுப வர்கள் மீதும் பொலிஸார்  வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நெல்லித்தோப்பு பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று முன்தினம் இரவு பொதுமக்களை ஒரே இடத்துக்கு வரவழைத்து ஆளுங்கட்சியான

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் மற்றும் அவரது அலுவலக ஊழியர் வேலு உள்ளிட்டோர் இலவசமாக காய்கறிகளை வழங்கினர். இதை வாங்க அங்கு 200க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் தகவல் பரவியது. அரசு அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் புகார் சென்றது. தடையை மீறி கும்பல் கும்பலாக பொதுமக்கள் நிற்பதை அங்கு ரோந்து பணியில் சென்ற பொலிஸாரும் உறுதி 

செய்தனர். இதையடுத்து உருளையன்பேட்டை பொலிஸார் அங்கு விரைந்து சென்று கூடி இருந்த பொதுமக்களிடம், தற்போது புதுவையில் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு உள்ளது. எனவே ஒன்று கூட வேண்டாம். கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

ஒரே இடத்தில் கும்பலை வரவழைத்து காய்கறிகளை விநியோகம் செய்தது பேரிடர்

மேலாண்மை சட்ட விதிகளுக்கு முரணானது என்பதால் ஆளுங்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார், அவரது ஊழியர் வேலு மீது நோய் கிருமி பரவும்

வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல், தடையை மீறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் உருளையன் பேட்டை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான பொலிஸார் நேற்று இரவு அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .