2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது’

Editorial   / 2019 ஒக்டோபர் 31 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க) உட்பட எக்கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவர் எச்.டி. தேவகெளடா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபையில் வெற்றிடமாகவுள்ள கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், அதானி, காக்வாட், எல்லாப்பூர், கோகாக், இரேகூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், சிவாஜிநகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு வருகிற அடுத்த மாதம் ஐந்தாம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தலிலேயே காங்கிரஸ், பா.ஜ.கவுடன் கூட்டணி கிடையாது என்று முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவகெளடா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையிலேயே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியிருந்த எச்.டி. தேவகெளடா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தான் எனது வீட்டுக்கு வந்து, ஆட்சி அமைக்க வலியுறுத்தியது. தொடக்கத்தில் நான் அதை நிராகரித்தேன். காங்கிரசின் நீண்ட நேர வலியுறுத்தலுக்கு பிறகு நான் காங்கிரஸ் விடுத்த கூட்டணி வேண்டுகோளை ஏற்றுக்கொண்டேன்.

எங்கள் கட்சிக்கும், காங்கிரஸ், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இரு கட்சிகளும் நம்பத்தகுந்தது அல்ல. அக்கட்சியினர் தேவைப்படும்போது எங்களை பயன்படுத்திக் கொண்டு, பிறகு அழித்துவிடுவார்கள். இரு கட்சிகளும் ஒரே மாதிரியான குணம் கொண்டவை. அதனால் சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா உள்பட எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். இடைத்தேர்தலில் ஜனதா தளம் (மதச்சாற்பற்ற) கட்சி தனித்து போட்டியிடும்” என்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .