2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’எனது குரலை மத்திய அரசால் தடுக்க முடியாது’

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடில்லி

 நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்காமல் மத்திய அரசால் தடுக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் டெல்லியின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 106 நாள்களுக்குப் பிறகு அவர் பிணையில் விடுதலையானார்.  

ப.சிதம்பரம் திஹார் சிறையிலிருந்து  வெளியே வந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தநிலையில் விடுதலையான மறுநாள் நாடாளுமன்றம் வந்தார். வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள்   போராட்டம் நடத்தினர்.

பிணையில் வெளியே வந்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரமும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் அவர் மாநிலங்கள வைக்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘‘நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் பங்கேற்க முடிந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்காமல் மத்திய அரசால் தடுக்க முடியாது’’ எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X