2024 மார்ச் 28, வியாழக்கிழமை

எரிபொருள் விலை உயர்வின்போது ஏன் பிரதமர் பேசுவதில்லை

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 புதுடெல்லி

தேர்வு நேரத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடுவது போல், பெற்றோல், டீசல் விலை உயரும் போது ஏன் பிரதமர் மோடி ஏதும் பேசுவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்க பரிக்‌ஷா பே சர்ச்சா என்ற பெயரில் 2018ஆம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.

தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படும். 4ஆவது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நேற்று நடந்தது.

 

இந்நிலையில் மாணவர்களுடன் தேர்வு நேரத்தில் கலந்துரையாடும் பிரதமர் மோடி, பெற்றோல், டீசல் விலை உயர்வின்போது மௌனமாக இருப்பது ஏன், மாணவர்களின்தேர்வை விட, ஒரு வாகனத்துக்கு பெற்றோல் நிரப்புவது எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்,

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட்டில் பதிவிட்ட கருத்தில் “ மத்திய அரசின் வரிவசூலால், ஒரு காருக்கு பெற்றோல், டீசல் நிரப்புவது என்பது தேர்வைவிட எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. பெற்றோல், டீசல் விலை குறித்து ஏன் பிரதமர் மோடி பேசுவதில்லை. பெற்றோல், டீசலுக்காக செலவிடும் தொகை குறித்தும் மோடி பேச வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X