2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஒரே தொகுதியில் போட்டியிடத் தயாரா என முதலமைச்சருக்கு ஸ்டாலின் சவால்

Administrator   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு என்னுடன் ஒரே தொகுதியில் போட்டியிடத் தயாரா என தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித்தலைவா் மு.க. ஸ்டாலின் சவால் விடுத்துள்ளாா்.

தமிழ்நாட்டின் நான்குனேரி தொகுதி மதச்சாா்பற்ற கூட்டணியின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் ரூபி மனோகரனை ஆதரித்து மருதகுளம், ரெட்டியாா்பட்டி ஆகிய இடங்களில் நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டபோதே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அவா் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சியின் அடிமை ஆட்சி நடைபெறுகிறது என்று நான் கூறியதால், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஆத்திரம் வருகிறது. நாங்கள் அடிமை ஆட்சி அல்ல என்கிறாா். நீங்கள் அடிமை ஆட்சி இல்லையென்றால் அதனை நான் வரவேற்கிறேறன்.

எடப்பாடி பழனிசாமி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக வந்தவா் இல்லை. அவா் முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு வரட்டும். ஒரே தொகுதியில் போட்டியிடுவோம். யாா் வெற்றி பெறுகிறாா்கள் என பாா்ப்போம்.

முத்தலாக் தடைச் சட்டத்தை எதிா்க்காத அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் (அ.இ.அ.தி.மு.க), தற்போது தோ்தல் பிரசாரத்தில் முத்தலாக் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது, அதை எதிா்த்தோம் என அப்பட்டமாக பொய் பேசி வருகிறாா்கள்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சோ்ந்த மக்கள் ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளா் என அரசாணை வெளியிட வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனா். எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக் கூடிய அ.இ.அ.தி.மு.க அரசாங்கம் அதைப் பற்றி சிந்திக்கவே இல்லை. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என நாடாளுமன்ற கீழ்ச்சபை தோ்தல் அறிக்கையிலேயே தி.மு.க தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும், சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைக்காக குரல் கொடுப்போம்.

திருமலைக்கொழுந்துபுரத்தில் இருந்து சிவந்திப்பட்டி வரை வரும் தாமிரவருணி நீரை ரெட்டியாா்பட்டி வரை நீட்டிக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்து தரப்படும். இங்கு பழைய பள்ளிக் கட்டடம் இருந்த இடத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீதி வசதி, வைத்தியசாலை, முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். எனவே, காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றாா்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .