2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒரு குடும்பத்துக்கு ரூ.5,000 தர வேண்டும்

Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

'தனிமைப்படுத்துதல் முயற்சி வெற்றி பெற, அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும், 5,000 ரூபாய் நிதியுதவியை அரசு வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்க, மருத்துவ பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு, கலெக்டர்களுடன், தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்

ஆலோசித்து, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். வங்கிகளில் வாங்கியிருக்கும் வாகனக் கடன்களுக்கான மாதாந்தத்  தவணைத் தொகை வசூலை, வங்கிகள் மூன்று மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்.

தனிமைப்படுத்துதல் முயற்சி வெற்றி பெற, அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும், 5,000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.

டொக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், பொலிஸார் ஆகியோருக்கு சிறப்பு ஊதியமாக, 5,000 ரூபாய் வழங்க, முதல்வர், இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .