2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’குஜ்ராலின் பேச்சை கேட்டிருந்தால் படுகொலையைத் தவிர்த்திருக்கலாம்’

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடில்லி

முன்னாள் பிரதமர் குஜ்ராலின் பேச்சை கேட்டிருந்தால், 1984 ல் நடந்த சீக்கியர் படுகொலை சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

கடந்த 1997 - 98 ல் பிரதமராக இருந்த ஐகே குஜ்ராலின் 100வது பிறந்த நாள் விழா நேற்றுமுன்தினம்  டில்லியில் நடந்தது. இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

''கடந்த 1984 ல் சீக்கியர் கலவரம் நடந்த போது, மாலை நேரத்தில், உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்ம ராவை, குஜ்ரால் சந்தித்தார். அப்போது, நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. விரைவாக இராணுவத்தை அழைக்க வேண்டியது கட்டாயம் என குஜ்ரால் அறிவுரை கூறினார்.

அந்த அறிவுரை ஏற்கப்பட்டிருந்தால், 1984 ல் நடந்த படுகொலை சம்பவங்கள் தவிர்த்திருக்க முடியும்.'' இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த 1984 ல் முன்னாள் பிரதமர் இந்திரா, பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .