2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குடியுரிமை திருத்த சட்டம் உத்தவ் தாக்கரே ஆதரவு

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வந்து தஞ்சம் அடைந்துள்ள இந்து, சீக்கிய, பௌத்த, ஜெயின், பார்சி 

மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை இயற்றியுள்ளது.

அந்த சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து அந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 

இந்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் இரண்டு மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெண்கள், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானங்கள்

நிறைவேற்றியுள்ளன. இதேபோல்  மராட்டிய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் முதலமைச்சர்  உத்தவ் தாக்கரே தலைமையிலான ஷிவ்சேனா குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்தச்  சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடும் வெவ்வேறானவை. இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

அதுபோலவே தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பும் வேறானது. குடியுரிமைச் திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது. 

அதனை மராட்டியத்தில் அதனை அமல்படுத்தினால் யாரும் கவலை பட வேண்டாம். அதேசமயம் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X