2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொவிட்-19

Editorial   / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொவிட்-19 தொற்று உறுதிபடுத்தப்பட்ட இந்தியாவின் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடகத் தலைநகரான பெங்களூரு பழைய விமான நிலைய வீதியிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை மருத்துவ ரீதியில் ஸ்திரமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டில் பணியாற்றிய சிலருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதால், அவர் சில நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து சில நாள்களுக்கு முன்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு கொவிட்-19 உறுதியானது. கடந்த சில நாள்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் எடியூரப்பா கலந்துகொண்டார். கடந்த மாதம் 29ஆம் திகதி பெங்களூருவில் நடந்த உயிரியல் அறிவியல் பூங்கா திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். கடந்த மாதம் 31ஆம் திகதி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசினார். சில அமைச்சர்களையும் சந்தித்தார்.

இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது இன்று காலை எட்டு மணி வரையில் 52,972-ஆல் உயர்ந்து 1,803,695ஆக உயர்ந்துள்ளதோடு, கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 771-ஆல் அதிகரித்து 38,135ஆக அதிகரித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .