2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படும்’

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 11 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை  

இந்தியா  முழுவதும் கொரோனா தடுப்பூசித் திருவிழா இன்று காலை ஆரம்பமாகியது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று 11ஆம் திகதி முதல் ஏப்ரல் 14 ஆம் திகதி வரை தகுதியுள்ளவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

மேலும், மாநில அரசுகள் இதனை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.  

  இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,  பிரதமர் மோடி, "நாம் இன்று தடுப்பூசித் திருவிழாவைத் தொடங்குகிறோம்.

இதன் நிமித்தமாக நாட்டு மக்கள் நான்கு விடயங்களைக் கடைப்பிடிக்குமாறு நான் வலியுறுத்துகிறேன்.

1.தடுப்பூசி போட விரும்புவோருக்கு தேவையான உதவியைச் செய்யுங்கள்.

2.முகக் கவசம் அணியுங்கள், மற்றவரையும் ஊக்குவிக்கவும்

 3.தொற்று கண்டறியப்பட்ட பகுதியை நுண் கட்டுப் பாட்டுப் பகுதியாக மாற்றுங்கள்

4. கொரோனா சிகிச்சையைப் பெற பொதுமக்களுக்கு உதவியாக இருங்கள்" என்று பிரதமர்  கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .