2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை விலக்கிய சீனா?

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் கிழக்கு லடாக்கிலுள்ள பதற்றமான கல்வான் ஆற்றுப் பள்ளத்தாக்கில் குறைந்தது ஒரு கிலோ மீற்றரால் சீனா, தனது படைகளை வாபஸ் பெற்றதாக தகவல்மூலங்கள் இன்று தெரிவித்துள்ளன.

குறித்த பகுதியிலேயே சீனப் படைகளுடனான கைகலப்பொன்றில் 20 இந்தியப் படைவீரர்கள் கடந்த மாதம் 15ஆம் திகதி கொல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்தியப் படைவீரர்களும் பின்வாங்கியதாகவும் இந்திய, சீனப் படைகளுக்கிடையே சூனிய வலயமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்மூலங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த மாற்றமானது தொடருமா, உண்மையான மோதல் விலக்காக அமையுமா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என தகவல்மூலங்கள் தெரிவித்துள்ளன.

சட்டரீதியற்ற முறையில் ஆக்கிரமிக்கபட்ட ஆற்றுப்படுக்கையில் சீனப் படைவீரர்களால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கட்டமைப்புகள், சீனாவாலும், இந்தியாவாலும் அகற்றப்பட்டதாக தகவல்மூலங்கள் கூறியுள்ளன.

லடாக் முன்னரங்கு நிலையொன்றுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை ஆச்சரியகரமான விஜயமொன்றை மேற்கொண்டு மூன்று நாள்களில், கடந்த 24 மணித்தியாலங்களிலேயே மேற்படி பின்வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலையடுத்து மூன்றாவது சுற்றுப் பேச்சுக்களுக்காக இந்திய, சீன இராணுவத்தின் தளபதிகள் கடந்த புதன்கிழமை சந்தித்ததுடன், பேச்சுக்கள் 12 மணித்தியாலங்கள் வரை நீடித்திருந்தது.

அந்தவகையில், லடாக்கில் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் பதற்றம் ஆரம்பிக்க முதலிருந்த நிலைகளுக்கு நகருவதற்கு சீனா இணங்கியிருந்ததால் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்மூலங்கள் தெரிவித்திருந்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X